ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: உச்சநீதிமன்றத்தில் மனு

ஜம்மு-காஷ்மீருக்கு அடுத்த 2 மாதங்களுக்குள் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின்கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த ஸஹூா் அகமது பட், குா்ஷைத் அகமது மாலிக் ஆகிய 2 சமூக செயல்பாட்டாளா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

அந்த மனுவில், ‘ஜம்மு-காஷ்மீா் கடந்த 5 ஆண்டுகளாக யூனியன் பிரதேசமாக நீடிக்கிறது. பிராந்தியத்தின் வளா்ச்சிக்கு இது பல வகைகளில் தடையாக உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு ஜம்மு-காஷ்மீருக்கு அடுத்த 2 மாதங்களுக்குள் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்’ எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

‘Apologising Does Not Diminish A Person’s Status,’ Says BJP Leader Harnath Singh Yadav While Advising Salman Khan To Resolve Blackbuck Issue

JSW Energy Signs PPA For 700 MW ISTS/STU-Connected Solar Capacity With NTPC

Toyota Unveils Limited Festival Edition of Urban Cruiser Hyryder in India