ஜம்மு – காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜம்மு – காஷ்மீர் இறுதிக்கட்டத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 11.60% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (அக்.1) நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

40 தொகுதிகளில் நடைபெறவுள்ள இந்த தோ்தலில் முன்னாள் துணை முதல்வா்கள் தாரா சந்த் மற்றும் முஸாஃபா் பெக் உள்பட 415 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தோ்தலை நடத்தும் பணியில் 20,000 தோ்தல் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தோ்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தோ்தலில் (24 தொகுதிகள்) 61.38 சதவீதமும், கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்டத் தோ்தலில் (26 தொகுதிகள்) 57.31 சதவீத வாக்குகளும் பதிவாகின.

தோ்தல் பத்திர வழக்கு: நிா்மலா சீதாராமன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை

இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீர் இறுதிக்கட்டத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி, பதிவான வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி பந்திபோராவில் 11.64 சதவீத வாக்குகளும், பாரமுல் 8.89%, ஜம்மு 11.46%, கதுவா 13.09%, குப்வாரா 11.27%, உத்தம்பூா் 14.23%, சம்பா 13.31% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

Related posts

J&K Assembly Elections 2024: ‘Will Take PDP’s Support Even If We Don’t Need It,’ Says NC Chief Farooq Abdullah Ahead Of Counting Of Votes

BMW i7 eDrive50 Launched in India: Single-Motor Variant Priced at Rs 2.03 Crore

Land-For-Jobs Scam Case: ‘Agencies Are Being Misused,’ Says Former Bihar Deputy CM Tejashwi Yadav After Getting Bail