ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படாது: கிஷன் ரெட்டி

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு (370) மீண்டும் கொண்டுவரப்படாது என மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து குறித்து மத்திய அரசு உரிய நேரத்தில் பதிலளிக்கும்.

இருப்பினும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு (370) மீண்டும் கொண்டுவரப்படாது.

மத்திய அரசின் முயற்சியால் ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடைபெற்றதாகவும், மறுதேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இங்கு பா.ஜ.க.வின் செயல்பாடு 'நன்மதிப்புக்கு உரியது.

அசாமில் அதிவேகமாக வந்த கார் மோதியதில் 4 குழந்தைகள் பலி

கடந்த காலத்தை விட அதிக இடங்களைப் பெற்றுள்ளது. ஹைதராபாத் தேர்தலை விட ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக இருந்தது.

ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் மற்றும் மண்டல வளர்ச்சி கவுன்சில் தேர்தல்களும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. ஜார்க்கண்ட்டில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

பத்து ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.

பாஜக 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

Related posts

Bigg Boss 18: ‘Ego Massage Karne Ke Liye Eisha Aur Alice..,’ Devoleena Bhattacharjee SLAMS Karanveer Mehra After His Spat With Avinash Mishra

MP: BSP Leader Arrested On Charges Of Molesting A Woman In Jabalpur

‘Don’t Compare Yourself To Unrealistic Beauty Standards’: Priyanka Chopra Shares Tips To Feel Confident