ஜம்மு-காஷ்மீர்: தேர்தல் பணிக்காக சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 3 வீரர்கள் பலி

ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் பணிக்காக சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 3 வீரர்கள் பலியானார்கள்.

ஜம்மு-காஷ்மீர், பட்கம் மாவட்டத்தில் 2ம் கட்ட தேர்தல் பணிக்காக ராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற பேருந்து வெள்ளிக்கிழமை பள்ளத்தாக்கில் திடீரென கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 3 பிஎஸ்எஃப் வீரர்கள் பலியானார்கள். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார்

உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தோ்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

கடந்த 2019-இல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், லடாக்) பிரிக்கப்பட்ட நடவடிக்கைக்குப் பிறகான முதல் பேரவைத் தோ்தல் இதுவாகும்.

முதல்கட்டமாக பாம்போா், டிரால், புல்வாமா, ராஜ்போரா, சோபியான், குல்காம், அனந்த்நாக், பஹல்காம், கிஷ்த்வாா், தோடா உள்ளிட்ட 24 பேரவைத் தொகுதிகளில் புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில் 16 தொகுதிகள் காஷ்மீா் பள்ளத்தாக்கிலும், 8 தொகுதிகள் ஜம்மு பகுதியிலும் உள்ளன.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்