ஜம்மு-காஷ்மீர்: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட 21 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மூன்று கட்ட பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டு, முதல்கட்ட வாக்குப் பதிவு கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப். 25-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக அரசு ஊழியர்கள் 21 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்ய இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் அரசு ஊழியர்கள் சிலர் ஈடுபட்டிருப்பதாக புகார் எழுந்த நிலையில், விசாரணையில், 21 ஊழியர்கள் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி