ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: பாஜகவின் 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

ஜம்மு- காஷ்மீர் பேரவைத் தேர்தலையொட்டி 29 வேட்பாளர்கள் அடங்கிய 3-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

ஜம்மு -காஷ்மீருக்கு வருகிற செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதையடுத்து தேர்தலுக்கான ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.

வருகிற செப். 18 ஆம் தேதி நடைபெறும் முதற்கட்டத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சிகள் ஏற்கெனவே அறிவித்துவிட்டன.

பாஜக 2, 3 ஆவது கட்டத் தேர்தலில் போட்டியிடும் 29 வேட்பாளர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் 2 ஆவது கட்டத் தேர்தலுக்கு 10 பேரும், 3-ம் கட்டத்திற்கு 19 பேரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து