ஜம்மு-காஷ்மீர், ஹரியாணாவில் வெல்லப் போவது யார்? தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு

ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீருக்கு 3 கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1இல் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

அதேசமயம் 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீர், ஹரியாணாவில் பதிவான வாக்குகள் அக். 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இரு மாநிலங்களிலும் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்த நிலையில் தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

சிஎன்என்: ஹரியாணாவில் பாஜக 24, காங்கிரஸ் கூட்டணி 58, ஆம்ஆத்மி 0, ஜேஜேபி 2, மற்றவை 4.

ரிபப்ளிக் பாரத்-மாட்ரிஸ்: ஹரியாணாவில் பாஜக 18-24, காங்கிரஸ் கூட்டணி 55-62, ஜேஜேபி 0-3, ஐஎன்எல்டி 3-6, மற்றவை 2-5.

இந்தியா டுடே மற்றும் சி ஓட்டர்: ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி 40- 48, பாஜக 27- 32, மக்கள் ஜனநாயகக் கட்சி 6 – 12, இதர கட்சிகள் 6 – 11.

டைம்ஸ் நவ்: ஹரியாணாவில் பாஜக 18-24, காங்கிரஸ் 55-62, பிஎஸ்பி 1, ஜேஜேபி 3.

Related posts

FPIs Selling Did Not Impact Indian Stock Market Much As DIIs Come To The Rescue

Alia Bhatt Opens Up About Clinical Anxiety: Key Signs & Symptoms Of Anxiety Disorder To Watch Out For

Mumbai: Amid Rains, People Throng For Both Sena Factions’ Dussehra Melava, Aaditya Thackeray To Address At Shivaji Park; VIDEO