ஜம்மு-காஷ்மீர், ஹரியானா சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு
ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
ஹரியானா மற்றும் யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஹரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் தேதி அடங்கிய அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று மாலை 3 மணிக்கு வெளியிட்டார்.
விளம்பரம்
இதையும் படிக்க:ISRO : விண்ணில் பாய்ந்தது புவி கண்காணிப்புக்கான EOS-8 செயற்கைக் கோள்… வெற்றிகரமாக நிலை நிறுத்தம்
அதன்படி ஜம்முகாஷ்மீரில் 3 கட்டங்களாகவும் ஹரியானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜீக் குமார் தெரிவித்தள்ளார். ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18 ஆம் தேதியும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25 ஆம் தேதியும் மூன்றாம் கட்ட தேர்தல் அக்டோபர் 1 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவிற்கு அக்டோபர் 1 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம்
ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சாசனத்தின் 370-வது பிரிவு, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்டது. மேலும் காஷ்மீர் மாநிலம் ஜம்மு – காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- Telegram
- Follow us onFollow us on google news
.Tags:
haryana
,
Jammu and Kashmir