ஜம்மு தேர்தல்: இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு

ஜம்மு கஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் அங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு இன்று(ஆக. 26) நிறைவடைந்துள்ளது.

அதன்படி, தேசிய மாநாட்டுக் கட்சி 51 இடங்களிலும், காங். 32 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. 5 இடங்களில் எந்த கட்சி போட்டியிட உள்ளது என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவுடன் இணைந்து ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தரீக் அகமது கர்ரா தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், பாந்தர்ஸ் கட்சி 1 இடத்திலும் போட்டியிடுகின்றன.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!