ஜெய்ப்பூர்: 507 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளை வழங்குவதற்காக ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பணிகளை விரைவுபடுத்த ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ரூ.655 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த நடவடிக்கையால் மாநிலத்தின் உள்ள 23 மாவட்டங்களின் உள்ள 46 பஞ்சாயத்து சமிதி பகுதிகளில் வசிக்கும் 1.12 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இது அமையும். அதே வேளையில் ஜல் ஜீவன் திட்டம் என்பது மத்திய அரசின் லட்சிய திட்டமாகும்.
இதையும் படிக்க: கேம் சேஞ்சர் டீசர் எப்போது!
ஆனால் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாக பணிகள் சரியான நேரத்தில் முடிவு பெறவில்லை என்றார் பஜன்லால் சர்மா.
இப்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் வழங்க மாநில அரசு உறுதியாக உள்ள நிலையில், திட்டத்தை விரைவுபடுத்த ரூ.658.12 கோடியை அனுமதித்துள்ளோம். இதில் 413 கிராமங்களுக்கு ரூ.520.28 கோடி மதிப்பில் 137 பணி ஆணைகள் வழங்கப்படும் என்றார் அமைச்சர் கன்னையா லால்.