ஜானி மாஸ்டருக்கு ஜாமீன்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலிருந்த ஜானி மாஸ்டருக்கு பிணை கிடைத்துள்ளது.

நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் கடந்த 4 வருடங்களாக பெண் உதவி நடன இயக்குநரைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார். முதலில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை எனக்கூறிய ஜானி மாஸ்டர் பின் குற்றத்தை ஒப்புக்கொண்டது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியது.

அந்தப் பெண் மைனராக இருக்கும்போதிருந்தே அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததால் ஜானி மாஸ்டர் மீது ஐபிசி (இந்திய குற்றவியல் சட்டம்) 376, 506 மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு சாரளப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, பிணை கேட்டு அவர் அளித்த மனு தள்ளுபடியானது.

இதையும் படிக்க: பனி – இயக்குநராக வென்றாரா ஜோஜு ஜார்ஜ்? ரசிகர்கள் கருத்து!

இந்த நிலையில், இன்று ரங்கா ரெட்டி நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இதனால், நாளை (அக்.25) சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம்.

மேலும், பிணையில் வெளியே வரும் ஜானி மாஸ்டர், புகார் அளித்த பெண்ணிற்கு எந்தத் தொந்தரவோ, அழுத்தத்தையோ தரக்கூடாது என நீதிமன்றம நிபந்தனை அளித்துள்ளது.

Related posts

பாஜக மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ்

நியூஸி.யை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி!

பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும்: மெஹிதி ஹாசன் மிராஸ்