ஜார்க்கண்ட் அரசியல்: பாஜகவில் இணைகிறார் சம்பாய் சோரன்

பாஜகவில் இணையும் சம்பாய் சோரன்… சட்டப்பேரவை தேர்தலால் அதிரும் ஜார்க்கண்ட் அரசியல்

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், அவர் பாஜகவில் இணைவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் முதலமைச்சரான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் கடந்த பிப்ரவரி மாதம் நிலமோசடி வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். அப்போது அக்கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரன் முதலமைச்சராகப் பதவியேற்றார். சுமார் 5 மாதங்கள் அவர் முதலமைச்சராக பதவி வகித்த நிலையில், ஹேமந்த் சோரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டதை அடுத்து சம்பாய் சோரன் பதவி விலகினார்.

விளம்பரம்

இந்நிலையில், அப்போது நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாகச் சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும், டெல்லி சென்ற அவர் பாஜக தலைவர்களையும் சந்தித்தார். இந்நிலையில், நேற்றிரவு டெல்லியில் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை சம்பாய் சோரன் சந்தித்து பேசினார். அப்போது அசாம் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் தேர்தல் பாஜக பொறுப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா உடனிருந்தார்.

இந்த சந்திப்பின் புகைப்படத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மா, “ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், நாட்டின் புகழ்பெற்ற ஆதிவாசி தலைவருமான சம்பாய் சோரன் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி ராஞ்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைவார்” என உறுதிப்படுத்தினார்.

விளம்பரம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Amit Shah
,
BJP
,
champai soren
,
jharkhand

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்