ஜார்க்கண்ட்: 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்புமனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதையும் படிக்க: தெலங்கானாவில் காங். தலைவர் குத்திக் கொலை!

இந்த நிலையில் நவம்பர் 23ஆம் தேதி இரண்டாம் கட்டமாக நிகழும் தேர்தலுக்கு 38 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து அக்.29 வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் ஏற்றுக்கொள்ளப்படும்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்பாளர்கள் நவம்பர் 1ஆம் தேதிக்குள் தங்கள் பெயர்களைத் திரும்பப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக ராஜ்மஹால், பாகூர், நாலா, ஜம்தாரா, ஜர்முண்டி, மதுபூர், சரத், போரேயாஹத், கோட்டா, மகாகாமா, ராம்கர், மண்டு, தன்வார், பகோதர், காண்டே, கிரிதிஹ், டும்ரி, கோமியா, பெர்மோ, பொகாரோ, சிந்த்ரி, நிர்சா, தன்பாத், ஜாரியா, துண்டி, பாக்மாரா மற்றும் சில்லி ஆகிய தொகுதிகளுக்கு பொதுப் பிரிவின் கீழ் தேர்தல் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: உணவு டெலிவரி செய்து இந்திய தம்பதியுடன் உரையாடிய டிரம்ப்!

எஸ்டி தொகுதிகளான போரியோ, பர்ஹைத், லிட்டிபாரா, மகேஷ்பூர், சிகாரிபாரா, தும்கா, ஜமா மற்றும் கிஜ்ரி, எஸ்சி தொகுதிகளில் தியோகர், ஜமுவா மற்றும் சந்தன்கியாரி ஆகியவை அடங்கும்.

11.84 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள் ஆவார். 1.13 லட்சம் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் உள்பட சுமார் 2.60 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2019 சட்டமன்றத் தேர்தலில் 2.23 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி