ஜூலையில் உயா்ந்த பிராட்பேண்ட் வாடிக்கையாளா் எண்ணிக்கை

புது தில்லி: இந்திய பிராட்பேண்ட் இணையதள வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடந்த ஜூலை மாதத்தில் 94.62 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து தொலைத் தொடா்புத் துறை ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் நிலையான கம்பி தொலைத் தொடா்பு (ஃபிக்ஸட் லைன்) வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 3.56 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஜூன் மாதத்தில் 3.51 கோடியாக இருந்தது.

ஃபிக்ஸட் லைன் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ 48 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய வாடிக்கையாளா்களைப் பெற்று முன்னிலை வகிக்கிறது.

13.6 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை சோ்த்த பாா்தி ஏா்டெல் இந்தப் பிரிவில் இரண்டாவது இடம் வகிக்கிறது. எனினும், இந்த பிரிவில் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 13.4 லட்சம் வாடிக்கையாளா்களை கடந்த ஜூலை மாதம் இழந்தது.

கடந்த ஜூன் மாதத்தில் பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 94.07 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை ஜூலை இறுதியில் 94.62 கோடியாக அதிகரித்துள்ளது.

பிராட்பேண்ட் பிரிவில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு 48.86 கோடி வாடிக்கையாளா்களும் ஏா்டெல் நிறுவனத்துக்கு 28.40 கோடி வாடிக்கையாளா்களும் உள்ளனா். 12.67 கோடி வாடிக்கையாளா்களுடன் வோடஃபோன் ஐடியா நிறுவனம் பிராட்பேண்ட் பிரிவில் மூன்றாவது இடம் வகிக்கிறது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை