ஜெகன்மோகன் ரெட்டி வீடு முன்பு இருந்த ஆக்கிரமிப்பு இடிப்பு

ஜெகன்மோகன் ரெட்டி வீடு முன்பு இருந்த ஆக்கிரமிப்பு இடிப்பு… ஆந்திராவில் பரபரப்பு!

ஆந்திரா ஜெகன்

ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் ஹைதராபாத் இல்லத்தின் முன்பகுதியில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களை மாநகராட்சி அதிகாரிகள் இன்று இடித்தனர்.

ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் படுதோல்வியடைந்தது. இதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராகவும், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லேகேஷுக்கு ஐ.டி. மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க : டிராபிக் போலீசாருக்கு ‘கூலிங் ஜாக்கெட்’ – எவ்வளவு வெயில் அடித்தாலும் குளுகுளுவென இருக்குமாம்!

இந்நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ‘லோட்டஸ் பாண்ட்’ இல்லத்தின் முன் பகுதியில் சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பதாகவும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் பொதுமக்களிடமிருந்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன.

#JUSTIN ஜெகன்மோகன் ரெட்டி பங்களா முன் பொது இடத்தில் கட்டப்பட்டிருந்த செக்யூரிட்டி பூத் இடிப்பு#Jeganmohanreddy#Building#Hyderabad#News18tamilnadu | https://t.co/uk2cvptedPpic.twitter.com/HpIhQLqJxq

— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 15, 2024

விளம்பரம்

இதையடுத்து சட்ட விரோத கட்டுமானங்களை அகற்ற ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் இன்று நடவடிக்கை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து புல்டோசர் மூலம் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டின் முன்புறத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதையும் படிங்க:
பெண்கள் குறித்து அவதூறு பேச்சு… சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை குஷ்பு புகார்!

இந்த கட்டுமானங்கள் ஜெகன்மோகன் ரெட்டியின் பாதுகாப்புக்காக கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சட்ட விரோத கட்டுமானங்கள் அகற்றும் நடவடிக்கையின்போது போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
JaganMohan Reddy
,
Telangana

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்