ஜெயம் ரவியின் பிறந்தநாளையொட்டி ‘பிரதர்’ படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

ஜெயம் ரவி நடித்துள்ள 'பிரதர்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இவர் தற்போது, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் 'பிரதர்' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது. 'பிரதர்' படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ் இயக்கும் இப்படத்திற்கு ஹாரில் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 'பிரதர்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

நடிகர் ஜெயம் ரவி இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் 'பிரதர்' படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது, இப்படத்தின் இசை வெளியீட்டு தேதி மற்றும் டீசர் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி, வருகிற 21-ந் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டீசர் வெளியீடு ஆகியவை நடைபெற உள்ளதை தெரிவித்துள்ளனர். மேலும் ஜெயம் ரவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

Get ready for a Musical Extravaganza @actor_jayamravi’s #Brother GRAND AUDIO & TEASER LAUNCH on Sep 21st ! A @Jharrisjayaraj Vibe https://t.co/VJ3KtiPxIO#HappyBirthdayJayamRavi#HBDJayamravi#HBDJR@rajeshmdirector@priyankaamohanpic.twitter.com/5V4cgK03ew

— Screen Scene (@Screensceneoffl) September 10, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!