ஜெய்ஸ்வால் சாதனையை முறியடித்த நிதிஷ் ரெட்டி

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 34 பந்தில் 74 ரன்கள் குவித்து அசத்தினார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் அரை சதமடித்த இந்திய வீரர் என்ற ஜெய்ஸ்வால் (21 வருடம் 227 நாட்கள்) சாதனையையும் நிதிஷ் ரெட்டி (21 வருடம் 136 நாட்கள்) முறியடித்துள்ளார்.இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் ரோகித் சர்மா (20 வருடம் 143 நாட்கள்), திலக் வர்மா (20 வருடம் 271 நாட்கள்), ரிஷப் பண்ட் (21 வருடம் 38 நாட்கள்) உள்ளனர்.

Related posts

பெண்கள் டி20 உலகக்கோப்பை; வங்காளதேச அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்; காலிறுதியில் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் இருந்து விலகும் ரோகித் சர்மா?