ஜேமி ஸ்மித் அதிரடியால் மீண்ட இங்கிலாந்து; பாக். நிதான ஆட்டம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஜாக் கிராவ்லி – பென் டக்கெட் இருவரும் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாக் கிராவ்லி 29 ரன்களில் ஆட்டமிழக்க அவருக்குப் பின் வரிசையில் வந்தவர்களும் அவசரமாக பெவிலியன் திரும்பினர்.

நியூசி.க்கு எதிராக வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன? ரகசியம் பகிர்ந்த வாஷிங்டன் சுந்தர்!

பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறினர். ஆலி போப் 3 ரன்களிலும், ஜோ ரூட் 5 ரன்களிலும், ஹாரி புரூக் 5 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். கஸ் அகிட்சன் 39 ரன்னில் வீழ்ந்தார்.

பென் டக்கெட் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதிரடி காட்டிய ஜேமி ஸ்மித் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.

68.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 267 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் சாஜித் கான் 6 விக்கெட்டுகளும், நோமன் அலி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

259 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து; ஏமாற்றமளித்த ரோஹித் சர்மா!

அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். இருப்பினும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்டர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர்.

அப்துல்லா ஷாபிக் 14 ரன்களிலும், சைம் அயூப் 19 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். கேப்டன் ஷான் மசூத் மற்றும் சௌத் ஷாகீல் இருவரும் தலா 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்துள்ளது. இரண்டாம் நாள் ஆட்டம் நாளை(அக்டோபர்.25) காலை நடைபெறவுள்ளது.

டக் அவுட்டில் சச்சினின் சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா!

Related posts

பாஜக மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ்

நியூஸி.யை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி!

பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும்: மெஹிதி ஹாசன் மிராஸ்