ஜோஷ் இங்கிலிஸ் அபார சதம்.. ஸ்காட்லாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் இங்கிலிஸ் 103 ரன்கள் குவித்தார்.

எடின்பர்க்,

ஸ்காட்லாந்து – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆகியும், ஜேக் பிரேசர் மெக்குர்க் 16 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இதன்பின் களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸ் ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த கேமரூன் கிரீன் 36 ரன்களும், ஸ்டோய்னிஸ் 20 ரன்களும், டிம் டேவிட் 17 ரன்களும் அடித்தனர்.

மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்கிலிஸ் 49 பந்துகளில் 103 ரன்கள் குவித்து அசத்தினார். இவரின் அதிரடியால் ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக பிராட்லி கியூரி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஸ்காட்லாந்து பேட்டிங் செய்ய உள்ளது.

Related posts

சச்சின் 194 ரன்களில் இருந்தபோது டிராவிட் டிக்ளேர் செய்தது ஏன்..? – பின்னணியை பகிர்ந்த ஆகாஷ் சோப்ரா

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா செல்லவில்லையெனில் பாகிஸ்தானுக்குத்தான் நஷ்டம் – ஆகாஷ் சோப்ரா

அந்த சமயத்தில் ரவி சாஸ்திரி பாட்டு பாடி எங்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்தார் – அஸ்வின்