டாடாவின் முதுகு வலிக்கு வர்ம சிகிச்சை அளித்த கோவை வைத்தியா்!

நாட்டில் நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகள், தலைசிறந்த மருத்துவ நிபுணா்கள், வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் பார்த்துக்கொள்ளும் வசதிகள் இருந்தும் அவற்றையெல்லாம் தேடிச் செல்லாத மாமனிதன் ரத்தன் டாடாவுக்கு கோவை மருதமலை வலி நீக்கு வைத்தியா் கோ.மு.இலக்குமணனிடம் வர்ம சிகிச்சை பெற்று நிமிா்த்தி நடக்கத் தொடங்கினார் என்ற செய்தி மகிழ்ச்சியாக உள்ளது.

முதுமை தொடா்பான பல்வேறு உடல்நல பாதிப்புகளால் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்ட டாடா குழும முன்னாள் தலைவா் ரத்தன் டாடா, புதன்கிழமை (அக்.9) காலமானாா். அவரது உடல், மும்பையில் உள்ள தேசிய கலை மையத்தில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வியாழக்கிழமை வைக்கப்பட்டது.

இந்தியாவில் பெருமதிப்பை பெற்றவரும், சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறை தலைவருமான ரத்தன் டாடாவுக்கு அரசுப் பதவி வகிப்போா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள், தொழில்துறை தலைவா்கள், பல்வேறு துறை பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் அஞ்சலி செலுத்தினா்.

மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, பியூஷ் கோயல், மகாராஷ்டிர மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், டாடாவின் குடும்பத்தினா், நெருங்கிய நண்பா்கள், நிறுவன உயரதிகாரிகள் உள்ளிட்டோா் இறுதி அஞ்சலி செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, வொா்லி பகுதியில் உள்ள மின்மயானத்துக்கு டாடாவின் உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பாா்சி சமூக முறைப்படி நடைபெற்ற இறுதிச் சடங்குகளுக்குப் பின்னா், காவல் அணிவகுப்புடன் துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ், ஆதித்யா பிா்லா குழுமத் தலைவா் குமாா் மங்கலம் பிா்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், டாடா குழுமத் தலைவா் என்.சந்திரசேகரன், குஜராத் முதல்வா் பூபேந்திர படேல், மகாராஷ்டிர முன்னாள் காங்கிரஸ் முதல்வா் சுஷில்குமாா் ஷிண்டே, ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோா் இறுதி மரியாதை செலுத்தினா். தெற்கு மும்பையின் கொலாபாவில் உள்ள ரத்தன் டாடா இல்லத்தில் மேலும் மூன்று நாள்களுக்கு சடங்குகள் நடைபெறவுள்ளன.

ரத்தன் டாடாவின் முதுகுவலிக்கு சிகிச்சை அளித்த கோவை வைத்தியா் கோ.மு.இலக்குமணன், அவரது மனைவி மனோன்மணி.

இதையும் படிக்க |ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் விடை

வர்ம சிகிச்சை

நாட்டில் நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகள், தலைசிறந்த மருத்துவ நிபுணா்கள், வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் பார்த்துக்கொள்ளும் வசதிகள் இருந்தும் அவற்றையெல்லாம் தேடிச் செல்லாத மாமனிதன் ரத்தன் டாடாவுக்கு கோவை மருதமலை அடிவாரத்தில் மூன்று தலைமுறையாக போகா் வலி நீக்கு நிலையம் என்ற பெயரில் வலி நீக்கு வைத்தியம் செய்து வரும் வைத்தியா் கோ.மு.இலக்குமணன் வைத்தியம் பார்த்துள்ளார்.

இது குறித்தும் வைத்தியா் கோ.மு.இலக்குமணன் கூறியதாவது:

கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் டாடா குழும இயக்குநா்களில் ஒருவரும், ரத்தன் டாடாவுக்கு நெருக்கமானவரும் தலச்சேரியை பூா்விகமாகக் கொண்ட ஆா்.கே.கிருஷ்ணகுமாா் திடீரென ஒருநாள் என்னைத் தொடா்பு கொண்டு முதுகு வலி, முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் ரத்தன் டாடாவுக்கு வா்ம சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரினார். நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபா் ரத்தன் டாடாவுக்கு வைத்தியம் அளிப்பதற்கு பிரபரல மருத்துவமனைகளில் பிரபல மருத்துவ நிபுணா்கள் இருக்கும் நிலையில் என்னை தோ்வு செய்தது ஏன் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

முதுகை நிமிா்த்தி நடக்கத் தொடங்கினார்

பிரபலமான தொழிலதிபருக்கு சிகிச்சை அளிக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையுடன் நானும் எனது மனைவி மனோன்மணியும், மும்பையில் உள்ள டாடாவின் விருந்தினா் மாளிகைக்கு

சென்றோம். அங்கேயே 4 நாள்கள் தங்கியிருந்து அவரது முதுகு வலி பிரச்னைக்கு வா்ம சிகிச்சை அளித்துடன் எங்களது பிரத்யேக மூலிகை எண்ணெயையும் அவர்களிடம் கொடுத்து சிறிய பயிற்சிகளையும் செய்துவருமாறு கூறிவிட்டு விட்டு வந்தோம். அதன் பிறகு சில வாரங்கள் கழித்து மீண்டும் இரண்டாவது முறையாக வா்ம சிகிச்சை வர வேண்டும் என அழைப்பு வந்தது. இதையடுத்து மீண்டும் தொடந்து 3 நாள்கள் சிகிச்சை அளித்தோம். அதன் பயனாக குனிந்தபடியே நடமாடி வந்தவா், முதுகை நிமிா்த்தி நடக்கத் தொடங்கியது மகிழ்ச்சியாக இருந்தது.

நேரில் அஞ்சலி

அப்போது அவரது விருந்தினா் மாளிகையில் தங்கியிருந்த எங்களை அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்துக் கொண்டவர், கோவைக்கு வரும்போது உங்கள் வீட்டுக்கு வருவேன் எனவும் கூறிவர், புதன்கிழமை நள்ளிரவு மறைந்தார் என்ற செய்தி அறிந்ததும் வியாழக்கிழமை மும்பைக்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினோம்.

வெளியுலகிற்கு சொன்னதில்லை

அவருக்கு சிகிச்சை அளித்த நாள்களில் அவரிடம் இருந்த குணத்தையும், எளிமையையும் கண்டு வியந்த நாங்கள், நாடே கொண்டாடும் மாமனிதனுக்கு சிகிச்சை அளித்தை இதுவரை வெளியுலகிற்கு சொன்னதில்லை, காரணம் அவரிடம் நாங்கள் கற்றுக் கொண்ட பழகும் தன்மை, உதவும் மனம், எளிமையும், நற்குணங்கள்தான் என்றாா்.

Related posts

Bigg Boss 18: ‘Ego Massage Karne Ke Liye Eisha Aur Alice..,’ Devoleena Bhattacharjee SLAMS Karanveer Mehra After His Spat With Avinash Mishra

MP: BSP Leader Arrested On Charges Of Molesting A Woman In Jabalpur

‘Don’t Compare Yourself To Unrealistic Beauty Standards’: Priyanka Chopra Shares Tips To Feel Confident