டானா புயல்: மேற்கு வங்க பள்ளிகளுக்கு அக். 26 வரை விடுமுறை!

டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்டோபர் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேற்கு வடமேற்கில் நகர்ந்து நாளை புயலாக வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிஸா மற்றும் மேற்கு வங்க கடற்கரை இடையே புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு நடுவே தீவிர புயலாக வலுப்பெற்று அக். 24 நள்ளிரவில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அப்போது, காற்றின் வேகம் 100 முதல் 120 கி.மீ. வேகம் வரை இருக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : வக்ஃப் வாரிய மசோதா: நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் திரிணமூல் எம்பிக்கு காயம்

இந்த புயலை எதிர்கொள்ள இரு மாநிலங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ், வடக்கு 24 பர்கானாஸ், கிழக்கு மேதினிபூர், மேற்கு மேதினிபூர், ஜார்கிராம், பாங்குரா, ஹூக்ளி, ஹெளரா மற்றும் கொல்கத்தா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் அக். 26 வரை விடுமுறை அளித்து மாநில அரசு அறிவித்துள்ளது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி