டிங் லிரென் தற்காலிக ஓய்வு..! குகேஷ் உடனான போட்டி நடைபெறாது!

ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 193 அணிகள் பங்கேற்கும் ஓபன் பிரிவில் இந்திய அணிஅசத்தி வருகிறது. செப் 23 வரை இந்தப் போட்டிகள் நடைபெறும்.

6ஆவது சுற்றில் இந்திய ஆடவா் பிரிவில் இந்திய ஹங்கேரி அணிகள் மோதின. அதில் இந்தியா 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிப் பெற்றது .

7ஆவது சுற்றில் இந்திய அணி சீனாவுடன் மோதுகிறது. இதில் டிங் லிரென் குகேஷ் போட்டி உலக செஸ் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியிருந்தது.

இந்நிலையில் இன்று ஒருநாள் மட்டும் டிங் லிரென் ஓய்வு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி வரும் நவ. 23 முதல் டிசம்பா் 15 -ஆம் தேதி வரை சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற சென்டோஸா ஹோட்டலில் நடைபெறவிருக்கிறது.

நடப்பு உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரேன், இந்திய இளம் வீரா் டி. குகேஷ் ஆகியோா் உலக சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் மோதவுள்ளனா்.

இதனால், இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒரு முன்னோட்டமாக இருக்குமென செஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அது நடக்காதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குகேஷுடனான சவாலை ஏற்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும் அது ஒரு திறமையான மூவ் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஃபிடே, சிங்கப்பூர் செஸ் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை முதல்முறையாக கூகுள் விளம்பரதாரராக செயல்படுமென அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!