டிடிஎஃப் வாசன் நேரில் ஆஜராக வேண்டும் – ஆந்திர போலீஸ் கிடுக்கிப்பிடி

டிடிஎஃப் வாசன் நேரில் ஆஜராக வேண்டும் – ஆந்திர காவல்துறையினர் கிடுக்கிப்பிடி!

டிடிஎஃப் வாசன்

பிராங்க் வீடியோ விவகாரத்தில் டிடிஎஃப் வாசன் நேரில் ஆஜராகவேண்டும் என்று திருமலை காவல்நிலையத்தினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்ற யூடியூபர் டிடிஎப் வாசன் மற்றும் அவரின் நண்பர்கள், சாமி தரிசனத்துக்கு முன்பு செல்போனில் வீடியோ எடுத்தபடி நடந்து சென்றனர். அப்போது தரிசனதுத்துக்காக பூட்டப்பட்ட அறைகளில் காத்திருந்த பக்தர்களின் கதவுகளை திறப்பது போல விளையாடி வீடியோ எடுத்தனர்.

டிடிஎப் வாசன் மற்றும் அவரின் நண்பர்கள் செயலால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர். இந்த பிராங் வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் டிடிஎப் வாசன் வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் திருமலை காவல்நிலையத்தில் டிடிஎப் வாசன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

விளம்பரம்

இந்நிலையில் தனக்கு பதிலாக தனது வக்கீலை திருமலை காவல் நிலையத்துக்கு வாசன் அனுப்பி வைத்திருந்தார். இதனை ஏற்க மறுத்த காவலர்கள், டிடிஎப் வாசன் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:
திருப்பதி கோயிலில் அனுமதி மறுப்பு… அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வாக்குவாதம்! – என்ன நடந்தது?

பிராங் வீடியோ எடுக்கப்பட்ட அன்று சிசிடிவி காட்சிகளை சேகரித்து வைத்துள்ள காவலர்கள் மேலும் சில வழக்குகள் பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
TTF Vasan

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து