டிபன் கடை நடத்தும் கேம் சேஞ்சர் பட நடிகை… லைஃப் சேஞ்ச் ஆனது எப்படி..

டிபன் கடை நடத்தும் கேம் சேஞ்சர் பட நடிகை… லைஃப் சேஞ்ச் ஆனது எப்படி…

தெலுங்கானாவில் டிபன் சென்டர் நடத்தி வரும் நடிகை

இப்போதெல்லாம் எம்பிஏ படித்தவர்களும் ஐஐடி பட்டதாரிகளும் கூட எம்பிஏ சாய்வாலா, யுபிஎஸ்சி சாய்வாலா, பி.டெக் சாய்வாலா எனக் கூறிக்கொண்டு பலரும் சாலையோரக் கடைகள் அமைத்திருப்பதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.

இதேபோன்று, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களில் நடிகராகவும், திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரங்களிலும் நடித்து வரும் நடிகை ஒருவர் தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நகிரேகல் நகரில் டிபன் சர்வீஸ் சென்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நடிகையின் பெயர் ஜான்சி.

ஜான்சி தொடர்ந்து சினிமாவிலும் சீரியலிலும் நடித்து வந்தாலும், இன்னொரு புறம் டிபன் சென்டரையும் நடத்தி வருகிறார். இவருடைய குழந்தைப் பருவத்தில், ​​நக்கீரேக்கல்லில் உள்ள அவருடைய வீட்டின் இருபுறமும் ராமகிருஷ்ணா தியேட்டரும், வெங்கடேஸ்வரலு தியேட்டரும் இருந்தன. இந்த திரையரங்குகள் இன்றும் இயங்கி வருகின்றன. பல நாடக மேடைகளில் நடிப்பைக் கற்றுக்கொண்ட பிறகு நடிகையாக வேண்டும் என்று ஆசை தனக்கு ஏற்பட்டதாக கூறுகிறார் ஜான்சி.

விளம்பரம்

இதையும் படிங்க: கடல் கடந்து செல்லும் கால்நடைத் தீவனம்… இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் எம்பிஏ பட்டதாரி…

​​தான் டப் ஸ்மாஷ் மற்றும் டிக் டாக் செயலிகள் மூலமாகவே நடிப்பு பயிற்சி செய்தேன். எனக்கு நடிப்பு நன்றாக வருகிறது என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டேன். என்னுடைய வீடியோவைப் தொடர்ச்சியாக பார்ப்பவர்களும், என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் என்னை சினிமாவில் நடிப்பதற்கு ஊக்கப்படுத்தினார்கள்.

எனக்கு திருமணமாகி மகன் பிறந்த பிறகு என்னுடன் நாடகத்துறையில் பழகிய சிலரால் எனக்கு டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது” என நியூஸ் 18 சேனலிடம் கூறுகிறார் ஜான்சி.

விளம்பரம்

கிரக பிரவேசம், மனசு மம்தா, குப்பேடாந்தா மனசு, ராதம்மா கூத்துரு மற்றும் நின்னே பெல்லதாதா போன்ற தொலைக்காட்சி தொடர்களில் ஜான்சி பணியாற்றியுள்ளார். பிரேம விமானன் லக்கம் என்ற படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்திலும் தான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக இவர் கூறி வருகிறார். இந்த வாழ்க்கையில் இவ்வளவு பெரிய நிலையை அடைந்ததற்கு தன்னுடைய சுய பயிற்சியே காரணம் என தன்னை மெச்சிக் கொள்கிறார் ஜான்சி..

விளம்பரம்

இதையும் படிங்க: காவல் தெய்வமான கண்ணன்… கோவர்த்தன மலையைத் தாங்கி நிற்கும் கிருஷ்ணர்…. நீலகிரியில் இப்படி ஒரு தலமா…

சமீபத்தில் நியூஸ்18 எடுத்த வீடியோவில், தன்னுடைய டிபன் சென்டரில் இருக்கும் தனது வாடிக்கையாளர்களுக்கு பஜ்ஜி மற்றும் உணவுகளை ஜான்சி வழங்குவதைக் காணலாம். இதற்கு நடுவிலும், எடிட்டிங் அறையில் நின்று கொண்டு தான் நடித்த சீரியல் காட்சிகளை அவர் பார்த்துக் கொண்டிப்பதையும் இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. பார்க்கிறார். ஒரு நடிகை தனது வணிக வாழ்க்கைக்கும் கவர்ச்சி மிகுந்த சினிமா வாழ்க்கைக்கும் இடையில் சிரமமின்றி செயல்பட்டு வருவதை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Actress
,
Local News
,
Telangana

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து