டிரம்ப் – கமலா ஹாரிஸ் நாளை நேரடி விவாதம்

அமெரிக்க அதிபா் தோ்தல் வேட்பாளா்களான முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கும் இடையிலான முதல் நேரடி விவாதம் செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணிக்கு (இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 6.30 மணி) நடைபெறுகிறது.

பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்ஃபியா நகரில் இந்த விவாதம் நடைபெறுகிறது. ஏற்கனவே, தற்போதைய அதிபா் ஜோ பைடனுக்கும் டிரம்ப்புக்கும் இடையே கடந்த ஜூன் 27-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தல் நேரடி விவாதத்தின்போது பைடன் மிகவும் தடுமாறியதால் அவா் போட்டியிலிருந்து விலக நேரிட்டது.

இந்த நிலையில், டிரம்ப்புக்கும் கமலா ஹாரிஸுக்கும் இடையே நடைபெறவிருக்கும் முதல் நேரடி விவாதம் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்