டிரம்ப் வெற்றி: கமலா ஹாரிஸுக்கு ராகுல் காந்தி வாழ்த்து -எதற்காக?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிவாகை சூடியுள்ளார். இதையடுத்து அவருக்கு பலதரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “நீங்கள் வெற்றி பெற்றதற்கு பாராட்டுகள், டொனால்ட் டிரம்ப்! அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், கமலா ஹாரிஸுக்கும் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். “கமலா ஹாரிஸின் எதிர்காலத் திட்டங்கள் நல்லவையாக நடைபெற அவருக்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

Congratulations on your victory, @realDonaldTrump! Wishing you success in your second term as US President.
All the best to @KamalaHarris in her future endeavours.

— Rahul Gandhi (@RahulGandhi) November 6, 2024

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related posts

பவர் கிரிட் கார்ப் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,793 கோடி!

முகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் அடுத்த 2 நாள்களுக்கு கூடுதல் டோக்கன்கள்!

நியூசி. ஒருநாள், டி20 தொடர்: இலங்கைக்கு புதிய கேப்டன்!