டிராவிஸ் ஹெட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க கவாஜா ஆதரவு; ஸ்டீவ் ஸ்மித்துக்கு எந்த இடம்?

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தன்னுடன் டிராவிஸ் ஹெட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என அவருக்கு உஸ்மான் கவாஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.

வெற்றிக்கான தேடலில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கடந்த 2014-15 ஆம் ஆண்டு நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றிருந்தது. அதன்பின், தொடர்ச்சியாக இந்திய அணி 4 பார்டர் – கவாஸ்கர் தொடர்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தவறவிடும் ஆஸ்திரேலிய அணி, இம்முறை அதன் சொந்த மண்ணில் கோப்பையை வசமாக்கும் முனைப்போடு களம் காண்கிறது.

விராட் கோலி – ஸ்டீவ் ஸ்மித் இடையேயான போட்டியைக் காண ஆவலாக உள்ளேன்: மேக்ஸ்வெல்

தொடக்க ஆட்டக்காரர் யார்?

டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரராக ஸ்டீவ் ஸ்மித் களமிறக்கப்பட்டார். அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அண்மையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரும் தெரிவித்திருந்தார். ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படாத பட்சத்தில், அவருக்குப் பதில் அந்த இடத்தில் யார் களமிறக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வங்கதேச டெஸ்ட் தொடர்: தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்!

டிராவிஸ் ஹெட்டுக்கு உஸ்மான் கவாஜா ஆதரவு

இந்தியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் யார் என உறுதிசெய்யப்படாத நிலையில், தன்னுடன் டிராவிஸ் ஹெட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என அவருக்கு உஸ்மான் கவாஜா ஆதரவு தெரிவித்துள்ளார்.

உஸ்மான் கவாஜா (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியில் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என்பதை அணித் தேர்வுக் குழுதான் முடிவு செய்யும். நான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, லபுஷேன் 3-வது வீரராகவும், ஸ்டீவ் ஸ்மித் 4-வது வீரராக களமிறங்கினால், டிராவிஸ் ஹெட் தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு சரியான தெரிவாக இருக்கும் என உணர்கிறேன்.

ஒருநாள் போட்டிகளில் டிராவிஸ் ஹெட் தொடக்க ஆட்டக்காரராக அபாரமாக விளையாடி வருகிறார். அதனால் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினால், நன்றாக இருக்கும் என்றே கூறுவேன். ஆனால், இந்த விஷயத்தில் முடிவு எனது கைகளில் இல்லை. அணித் தேர்வுக் குழுத் தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியின் நலனுக்காக பல சிறந்த முடிவுகளை எடுத்துள்ளனர்.

டேவிட் வார்னரின் இடத்துக்கு குறிவைக்கும் மேத்யூ ஷார்ட்!

4-வது இடம் சரியாக இருக்கும்

ஸ்டீவ் ஸ்மித் மிகச் சிறந்த வீரர். டெஸ்ட் போட்டிகளில் அவர் 4-வது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடக் கூடியவர். அவருக்கு 4-வது இடம் சிறப்பான தெரிவாக இருக்கும் என நினைக்கிறேன். மார்னஸ் லபுஷேன் 3-வது இடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் 4-வது இடத்திலும் களமிறங்கினால், அணி சமபலத்துடன் இருக்கும் என நினைக்கிறேன். அணியின் நலனுக்கு எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எந்த இடத்தில் களமிறங்குகிறோம் என்பது முக்கியமில்லை.

டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் உஸ்மான் கவாஜாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 4 டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 28.50 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து