டி.என்.பி.எல்.: அருண் கார்த்திக் அதிரடி… நெல்லை ராயல் கிங்ஸ் 177 ரன்கள் குவிப்பு

நெல்லை அணி தரப்பில் அதிகபட்சமாக அருண் கார்த்திக் 84 ரன்கள் குவித்தார்.

நெல்லை,

டி.என்.பி.எல். தொடரின் இன்றைய ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நெல்லை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அருண் கார்த்திக்- மொஹித் ஹரிஹரன் களமிறங்கினர். இதில் ஹரிஹரன் 1 ரன்னிலும் அவரை தொடர்ந்து களமிறங்கிய குருசாமி 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அருண் கார்த்திக் அதிரடியாக விளையாடினார். அவருக்கு ஈஸ்வரன் ஓரளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதிரடியாக விளையாடிய அருண் கார்த்திக் 84 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நெல்லை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக அருண் கார்த்திக் 51 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். திருச்சி தரப்பில் சரவணகுமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி திருச்சி பேட்டிங் செய்ய உள்ளது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா