டி.என்.பி.எல். கிரிக்கெட்; டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பேட்டிங் தேர்வு

இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.

சேலம்,

8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் – சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி