டி.என்.பி.எல்.கிரிக்கெட்: நெல்லை – திருச்சி அணிகள் இன்று மோதல்

18-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

நெல்லை,

8 அணிகள் இடையிலான 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி என் பி எல்) டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. முதல் 9 லீக் ஆட்டங்கள் சேலத்திலும், அடுத்த 8 லீக் ஆட்டங்கள் கோவையிலும் நடந்தது. முதல் 2 சுற்று ஆட்டம் முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. முன்னாள் சாம்பியனான சேப்பாக் சூப்பர் சூப்பர் கில்லீஸ் 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டி தொடரில் நேற்று ஓய்வு நாளாகும்.

இந்த நிலையில் இதன் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இங்கு 6 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது.

இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் – திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா