டி.என்.பி.எல்.: சாத்விக், துஷார் அரைசதம்… திருப்பூர் 192 ரன்கள் குவிப்பு

திருப்பூர் தரப்பில் அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 79 ரன்கள் குவித்தார்.

நெல்லை,

டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் – சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சாத்விக் – துஷார் ரஹேஜா இணை சிறப்பாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் சாத்விக் 50 ரன்களிலும், துஷார் 79 ரன்களுலும் ஆட்டமிழந்தனர். அவர்களுக்கு பின் களமிறங்கிய வீரர்களில் ஒரு பேட்ஸ்மேன் கூட 20 ரன்களை தாண்டவில்லை. இதனால் 200 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி 192 ரன்களில் கட்டுப்படுத்தப்பட்டது.

20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் 9 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்த்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 79 ரன்களும், சாத்வில் 50 ரன்களும் அடித்தனர். சேலம் தரப்பில் அதிகபட்சமாக பொய்யாமொழி மற்றும் குரு சாயி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சேலம் பேட்டிங் செய்ய உள்ளது.

Related posts

சச்சின் போலவே விராட் கோலியும் கொஞ்சம் அதில் தடுமாறுகிறார் – இந்திய முன்னாள் வீரர்

டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச அணிக்கு எதிராக முதல் வீரராக வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்

ஒருநாள் கிரிக்கெட்: பிறந்தநாளில் வரலாற்று சாதனை படைத்த ரஷித் கான்