‘டி-20’ உலக கோப்பை: சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா

நியூயார்க்: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று (12.06.2024) இந்தியா, அமெரிக்காவை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது.

வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று (12.06.2024) நியூயார்க் எய்சன்ஹவர் பார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு110 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக நிதீஷ்குமார் 27 ,. ஸ்டீவன் 24ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் அர்தீப்சிங் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து 111 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து 7 வி்க்கெட் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தியது.

இதன் மூலம் வரிசையாக அயர்லாந்து, பாகிஸ்தானை சாய்த்த இந்திய அணி இன்றைய போட்டியில் அமெரிக்காவை வென்று ‘சூப்பர்-8’ சுற்றுக்கு முன்னேறியது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா