டி20 உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்

சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 44 ரன்களும் , ஷதாப் கான் 40 ரன்களும் எடுத்தனர்

டல்லாஸ்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறுகின்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன பாகிஸ்தான், அறிமுக அணியான அமெரிக்காவுடன் விளையாடுகின்றது. டல்லாஸ் நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் முகமது ரிஸ்வான் 9 ரன்களும் , உஸ்மான் கான் 3ரன்களும் , பகர் ஜமான் 11 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் பாபர் அசாம் , ஷதாப் கான் இருவரும் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 44 ரன்களும் , ஷதாப் கான் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் இப்திகார் அகமது , ஷாஹீன் அப்ரிடி அதிரடியாக ரன்கள் குவித்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு159 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து 160 ரன்கள் இலக்குடன் அமெரிக்கா அணி விளையாடுகிறது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா