டி20 உலகக்கோப்பை: அமெரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா :

ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் , சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

அமெரிக்கா :

ஸ்டீவன் டெய்லர், ஷயான் ஜஹாங்கீர், ஆண்ட்ரீஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ், நிதிஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஷாட்லி வான் ஷால்க்விக், ஜஸ்தீப் சிங், சவுரப் நேத்ரவல்கர், அலி கான்

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா