டி20 உலகக்கோப்பை; அயர்லாந்து அபார பந்துவீச்சு…கனடா 137 ரன்கள் சேர்ப்பு

கனடா அணி தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் கிர்டன் 49 ரன்கள் எடுத்தார்.

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நியூயார்க்கில் நடை பெற்று வரும் 13-வது லீக் ஆட்டத்தில் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி, சாத் பின் ஜாபர் தலைமையிலான கனடாவுடன் ஆடி வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து கனடா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் ஜான்சன் மற்றும் நவ்நீத் தலிவால் ஆகியோர் களம் இறங்கினர். இதில் நவ்நீத் தலிவால் 6 ரன், ஆரோன் ஜான்சன் 14 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய பர்கத் சிங் 18 ரன், தில்ப்ரீத் பஜ்வா 7 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து நிக்கோலஸ் கிர்டன் மற்றும் ஷ்ரேயாஸ் மொவ்வா ஆகியோர் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

இதில் நிக்கோலஸ் கிர்டன் 49 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய தில்லன் ஹெய்லிகர் 0 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் கனடா அணி 20 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.

கனடா அணி தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் கிர்டன் 49 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் கிரேக் யங், பேரி மெக்கர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி ஆட உள்ளது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா