டி20 உலகக்கோப்பை: அரையிறுதி போட்டிகளுக்கான நடுவர்கள் விவரம் அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

துபாய்,

டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் முதலாவது அரையிறுதி ஆட்டத்திலும், இந்தியா – இங்கிலாந்து அணிகள் 2வது அரையிறுதி ஆட்டத்திலும் மோத உள்ளன.

இந்திய நேரப்படி முதலாவது அரையிறுதி ஆட்டம் நாளை காலை 6 மணிக்கும், 2வது அரையிறுதி ஆட்டம் நாளை இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த அரையிறுதி ஆட்டங்களுக்கான நடுவர்கள் விவரங்களை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் (டிரினிடாட்) போட்டிக்கான நடுவர்கள் விவரம்:

நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் (வெஸ்ட் இண்டீஸ்)

கள நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து) மற்றும் நிதின் மேனன் (இந்தியா)

டிவி நடுவர்: ரிச்சர்ட் கெட்டில்பரோ (இங்கிலாந்து)

நான்காவது நடுவர்: அஹ்சன் ராசா (பாகிஸ்தான்)

இந்தியா – இங்கிலாந்து (கயானா) போட்டிக்கான நடுவர்கள் விவரம்:

நடுவர்: ஜெப்ரி குரோவ் (நியூசிலாந்து)

கள நடுவர்கள்: கிறிஸ் கேப்னி (நியூசிலாந்து) மற்றும் ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா)

டிவி நடுவர்: ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்)

நான்காவது நடுவர்: பால் ரீபெல் (ஆஸ்திரேலியா)

The officials are confirmed ✅These are the umpires who will take charge of #SAvAFG and #INDvENG ⬇️https://t.co/7Q50IBkBmD

— ICC (@ICC) June 25, 2024

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி