டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார்

பிரிட்ஜ்டவுன்,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பிரிட்ஜ்டவுனில் இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு நடக்கும் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் (பி பிரிவு) மோதுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

ஆஸ்திரேலியா :

டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

இங்கிலாந்து :

ஜோஸ் பட்லர், பிலிப் சால்ட், வில் ஜாக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜோர்டான், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க் வுட்.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி