டி20 உலகக்கோப்பை: இந்தியா திரும்பும் 2 வீரர்கள்…பி.சி.சி.ஐ. எடுத்த அதிரடி முடிவு

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 4 பேர் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

ஆன்டிகுவா,

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்தியா, தனது கடைசி லீக் போட்டியில் கனடாவை எதிர்கொள்கிறது. இதன்பின் இந்திய அணி வீரர்கள் அனைவரும் சூப்பர் 8 சுற்றில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் பயணிக்க உள்ளனர்.

இதனிடையே இந்திய அணி நிர்வாகம் (பி.சி.சி.ஐ.) அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியுடன், 4 பேர் ரிசர்வ் வீரர்களாக பயணித்தனர். ரிங்கு சிங், சுப்மன் கில், ஆவேஷ் கான் மற்றும் கலீல் அகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர். தற்போது ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் உள்ள சுப்மன் கில், ஆவேஷ் கான் இருவரும் நாடு திரும்பவுள்ளது தெரிய வந்துள்ளது.

கனடா அணிக்கு எதிரான லீக் போட்டி முடிவடைந்த பின், அமெரிக்காவில் இருந்து சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் இந்தியா திரும்பவுள்ளனர். தொடக்கத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் முழுக்கவே ரிசர்வ் வீரர்களை பயணிக்க வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்திய அணி நிர்வாகம் 2 வீரர்களை விடுவிக்க முடிவு எடுத்துள்ளது. சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் நாடு திரும்பும் நிலையில், ரிங்கு சிங் மற்றும் கலீல் அகமது இருவரும் இந்திய அணியுடன் பயணிக்க உள்ளனர்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா