டி20 உலகக்கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு பயங்கரவாதிகள் மிரட்டல்

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் வரும் ஜூன் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

நியூயார்க்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

இதனையடுத்து இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் ஜூன் 9-ம் தேதி இதே மைதானத்தில் மோத உள்ளது.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இதனையடுத்து போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றி வழக்கமான பாதுகாப்பை விட கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என நியூயார்க் காவல்துறை அறிவித்துள்ளது.

Related posts

இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து