டி20 உலகக்கோப்பை: ஏதோ ஒரு ஆசிய அணிதான் வெற்றி பெறும்..அதிலும் குறிப்பாக.. – தில்ஷன் கணிப்பு

டி20 உலகக்கோப்பையை ஏதேனும் ஒரு ஆசிய அணிதான் வெல்லும் என்று தில்ஷன் உறுதியான கணிப்பை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் 20 அணிகள் விளையாடி வருகின்றன.

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற ஏதேனும் ஒரு ஆசிய அணிதான் வெல்லும் என்று தில்ஷன் உறுதியான கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பாக மற்ற அணிகளை காட்டிலும் வலுவாக இருக்கும் இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு விராட் கோலியை போன்ற ஒருவர் மட்டும் போராடாமல் அனைத்து இந்திய வீரர்களும் சேர்ந்து அசத்தலாக விளையாட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:- "அனைத்து அணிகளுக்கும் இங்கே சவால் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் உலகின் டாப் அணிகள் அமெரிக்காவில் விளையாடியதில்லை. சூப்பர் 8 சுற்று துவங்கியதும் அனைத்து ஆசிய அணிகளும் சாதகத்தை பெறும். ஏனெனில் வெஸ்ட் இண்டீசில் உள்ள மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும். அது ஆசிய அணிகளுக்கு பெரிய சாதகத்தை கொடுக்கும். இந்த டி20 உலகக் கோப்பையை ஒரு ஆசிய அணிதான் வெல்லும் என்று நான் உணர்கிறேன்.

விராட் கோலி தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கிறார். அவர் மேட்ச் வின்னிங் வீரர். ஆனால் அவரைப் போன்ற ஒருவரால் மட்டும் உங்களுக்கு போட்டியை வென்று கொடுக்க முடியாது. அனைவரும் வெற்றியில் பங்காற்ற வேண்டும். அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்திய அணிக்கு கண்டிப்பாக வாய்ப்புகளும் சாதகமும் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் இப்போதுதான் ஐபிஎல் தொடரை முடித்தனர். விராட் கோலி வெற்றி பெற்று கொடுக்கக்கூடிய ஒரு வீரர். அவர் தன்னுடைய ஐபிஎல் பார்மை இந்த உலகக்கோப்பையிலும் தொடர்வார் என்று நம்புகிறேன்" என கூறினார்.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா