டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று: இந்தியா – வங்காளதேசம் அணிகள் நாளை மோதல்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

ஆண்டிகுவா,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.

இதையடுத்து இந்த தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 47 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இதையடுத்து இந்திய அணி தனது 2வது சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நாளை வங்காளதேசத்தை ஆண்டிகுவாவில் சந்திக்கிறது.

வங்காளதேச அணி சூப்பர் 8 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி கண்டிருந்தது. எனவே வங்காளதேச அணி தனது முதல் வெற்றிக்காக கடுமையாக போராடும். அதேவேளையில் இந்திய அணி தனது வெற்றிப்பயணத்தை நீட்டிக்க முயற்சிக்கும். எனவே நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – அமெரிக்கா அணிகள் மோத உள்ளன.

Related posts

இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து