டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றில் இந்தியா இந்த 3 அணிகளுடன் மோத வாய்ப்பா..?

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 4 அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

நியூயார்க்,

கடந்த 1-ம் தேதி தொடங்கிய 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று வரும் 17-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் மட்டுமே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கின்றன. இன்னும் நான்கு இடங்கள் எஞ்சியுள்ள நிலையில், அதில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுடன் சூப்பர் 8 சுற்றில் மோத வாய்ப்புள்ள அணிகள் குறித்து இங்கு காண்போம். சூப்பர் 8 சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அல்லது நெதர்லாந்து அணியை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

சூப்பர் 8 சுற்றில் மூன்றில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகிவிடும். இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு எளிதாக சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து