டி20 உலகக்கோப்பை: நமீபியா அபார பந்துவீச்சு…ஓமன் 109 ரன்களில் ஆல் அவுட்

நமீபியா தரப்பில் அதிகபட்சமாக டிரம்பெல்மேன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பார்படாஸ்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில் ஓமன் – நமீபியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் எராஸ்மஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணியின் பேட்ஸ்மேன்கள் நமீபியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 19.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த ஓமன் 109 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக காலித் கைல் 34 ரன்கள் அடித்தார். நமீபியா தரப்பில் அதிகபட்சமாக சிறப்பாக பந்து வீசிய டிரம்பெல்மேன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதனையடுத்து 110 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நமீபியா 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்களுடன் விளையாடி வருகிறது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா