டி20 உலகக்கோப்பை: பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் நியூசிலாந்து – பப்புவா நியூ கினியா அணிகள் விளையாடுகின்றன.

தரோபா,

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தரோபா நகரில் இன்று நடக்கும் 39-வது லீக் ஆட்டத்தில், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நியூசிலாந்து அணி, பப்புவா நியூ கினியாவை (சி பிரிவு) எதிர்கொள்கிறது.

மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மழை நின்றதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பப்புவா நியூ கினியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா