டி20 உலகக்கோப்பை: வங்காளதேச அணிக்கு எதிராக நெதர்லாந்து பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்

கிங்ஸ்டவுன்,

அனல் பறக்க நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற உள்ள 27-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் – நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. வெஸ்ட் இண்டீசில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது.

டி பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளும் தலா 1 வெற்றி, 1 தோல்வி பெற்றுள்ளதால் இந்த ஆட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா