டி20 உலகக்கோப்பை: விராட் கோலி படைக்க வாய்ப்புள்ள மாபெரும் சாதனைகள்

எதிர் வரும் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சில மாபெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது.

புதுடெல்லி,

ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்த முறை 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. அதோடு இந்து தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி தற்போது அமெரிக்கா சென்று தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணி நிச்சயம் வெற்றி பெற்று கோப்பையுடன் நாடு திரும்ப வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பையில் விளையாட இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 2 மாபெரும் சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. அவை விவரம் பின்வருமாறு:-

1. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக பவுண்டரிகளை அடித்த வீரராக இலங்கையின் ஜெயவர்த்தனே 111 பவுண்டரிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்து விராட் கோலி 103 பவுண்டரிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த தொடரில் 9 பவுன்டரிகள் அடிக்கும் பட்சத்தில் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைப்பார்.

2. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள் (319) அடித்த வீரராக முதலிடத்தில் இருக்கும் விராட் கோலி தன்னுடைய சாதனையை தானே முறியடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இந்த தொடரில் மற்ற சீசன்களை விட அதிக போட்டிகளில் வீரர்கள் விளையாட வாய்ப்புள்ளது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா