டி20 உலகக்கோப்பை: ஹர்திக் அபார பந்துவீச்சு…அயர்லாந்து 96 ரன்களில் ஆல் அவுட்

இந்தியா தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

நியூயார்க்,

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இந்தியா – அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அயர்லாந்து ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் டெலானி அதிரடியாக விளையாடி அயர்லாந்து கவுரமான நிலையை எட்ட உதவினார்.

வெறும் 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அயர்லாந்து 96 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் சிராஜ், அக்சர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக டெலானி 26 ரன்கள் அடித்தார்.

Related posts

இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

புரோ கபடி லீக்: பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய மண்ணில் வரலாறு படைத்த நியூசிலாந்து