டி20 உலகக் கோப்பையில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர்!

டி20 உலகக் கோப்பையில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர்!டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.ஷகிப் அல் ஹசன்படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் 50 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.

இந்திய அணி அதன் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியதன் மூலம், டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் அவருக்கு அடுத்தபடியாக 39 விக்கெட்டுகளுடன் பாகிஸ்தான் வீரர் ஷகித் அஃப்ரிடி உள்ளார்.

Related posts

Value of gold bar hits $1 million for the first time ever

Excise Policy case: Delhi HC dismisses Arvind Kejriwal’s plea challenging his arrest by CBI

வயநாடு மக்களுக்கு ராகுல் உருக்கமான கடிதம்!