டி20 உலகக் கோப்பை; இந்திய அணியின் துருப்புச்சீட்டாக அவர்தான் இருப்பார் – சுரேஷ் ரெய்னா

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்தை நியூயார்க் நகரில் எதிர்கொள்கிறது.

மும்பை,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் நாளை முதல் ஜூன் மாதம் இறுதிவரை நடைபெற இருக்கிறது. இம்முறை இந்த தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருக்கும் வேளையில் இந்திய அணியானது 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பிடித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்தை நியூயார்க் நகரில் எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக ஷிவம் துபே தான் இருப்பார் என இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அவர் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும். பெரிய சிக்சர்களை அடிக்கும் போது திடமாக நிற்கும் திறமை மிகவும் அரிதானதாகும். ஷிவம் துபே இந்தியா உலகக் கோப்பையை வெல்வதற்கான துருப்புச் சீட்டாக இருப்பார்.

விராட் கோலி துவக்க வீரராக களமிறங்க வேண்டுமா என்பதைப் பற்றிய முடிவை ரோகித் சர்மா எடுப்பார். அதே சமயம் ஜெய்ஸ்வால் வித்தியாசமாக பேட்டிங் செய்கிறார். ஒருவேளை சூழ்நிலை உருவானால் ஷிவம் துபே இந்தியாவுக்காக பந்து வீசவும் தயாராக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சேப்பாக்கத்தில் இந்தியா-வங்காளதேசம் டெஸ்ட் போட்டி; நாளை டிக்கெட் விற்பனை

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா சாம்பியன்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 211/5