டி20 போட்டியில் ஆஸி. அணிக்காக இளம் வயதில் அரைசதம் அடித்த 2-வது வீரர்!

சர்வதேச டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக இளம் வயதில் அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் டிராவிஸ் ஹெட் புதிய சாதனை!

இரண்டாவது வீரர்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், 31 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணிக்காக ஜேக் ஃபிரேசர் மெக்கர்க்கின் முதல் அரைசதம் இதுவாகும்.

டேவிட் வார்னர்

இந்த அரைசதத்தின் மூலம், ஆஸ்திரேலிய அணிக்காக இளம் வயதில் (22 வயது மற்றும் 155 நாள்கள்) அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்காக இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் தன்வசம் வைத்துள்ளார். அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 43 பந்துகளில் 89 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது வார்னருக்கு 22 வயது 76 நாள்கள் மட்டுமே.

இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் தேவையில்லை: பந்துவீச்சு பயிற்சியாளர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமான டேவிட் வார்னர், அவரது அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் எடுத்து அசத்தினார். அறிமுகப் போட்டியிலேயே டேவிட் வார்னர், வேகப் பந்துவீச்சாளர்களான டேல் ஸ்டைன், மக்யா நிட்னி, ஜாக் காலிஸ் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் ஜோஹன் போதா ஆகியோருக்கு எதிராக சிறப்பாக விளையாடினார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (செப்டம்பர் 15) மான்செஸ்டரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று மாலை ஜார்க்கண்ட் செல்கிறார் அமித் ஷா!

தில்லி முதல்வராக அதிஷி செப்.21-ல் பதவியேற்பு!

தனியார் உணவத்தில் அரசு முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் எப்படி? – துறையூரில் பரபரப்பு